திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (16:05 IST)

நம்ம சும்மா பார்த்துட்டா இருப்போம் - நாட்டாமைக்கு தீர்ப்பு சொல்ல வந்த பெரிய தல!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கிராமத்து கெட்டப் போட்டு புது புது டாஸ்க்களை செய்தது மட்டுமல்லாது மிகப்பெரிய பிரச்சனையே வெடித்தது. தற்போது அதனை தீர்த்து வைக்க கமல் வந்துட்டார். 


 
நாட்டாமை சேரன், டாஸ்க் விளையாடியபோது என்னை தகாத இடத்தில் தொட்டுட்டார் என்று கூறி ஒரு ரகளையே செய்துட்டார் மீரா. இதனால் சேரன் மனமுடைந்து அழுது மன்னிப்பு கேட்டார்.  சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்திய மீரா மிதுனுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் மீராவுக்கு நிச்சயம் ஒரு குறும்படம் போட்டு காட்டவேண்டுமெனவும், சேரன் இந்த அவமானங்களை எல்லாம் எதிர்கொள்வதை விட வெளியே வந்துவிடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இந்த வாரம் பஞ்சாயத்தில் கமல்  யாருக்கு என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சற்றுமுன் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 
 
இதில் கமல் ஹாசன், "தீராத பிரச்னையை கூட தீர்த்து வைக்குற இடம் இந்த கிராம சபைன்னு நம்பிட்டு இருக்குற ஆளு நானு... உள்ள என்ன செஞ்சுப்புட்டாங்கனு பார்த்தீங்களா...நாட்டாமையே போட்டு நொறுக்கிப்புட்டாங்க அவரும் நொறுங்கிட்டாரு.. பிராது குடுக்குறேங்குற பேருல இப்படியா செய்யுறது?.. ஆனால் , நம்ம என்ன சும்மா பார்த்திட்டு இருப்போம்மா... நம்மளும் குடுப்போம்ல..பிராது இன்னைக்கு ராத்திரி பாருங்க " என கமல் கிராமத்து பாஷையில் பேசி மக்களை அலார்ட் செய்துள்ளார்.