எல்லாரும் இங்க பின்னாடி பேசுறவங்க தான் - சேரனை திட்டிய சாக்ஷி!

Last Updated: வெள்ளி, 26 ஜூலை 2019 (16:31 IST)
பிக்பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் செய்யும் அளப்பறைகளை தாங்கமுடியவில்லை என ரசிகர்கள் மட்டுமல்லாது ஹவுஸ்மேட்ஸ் பலரும் தெரிவித்து வந்தார்கள். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுனுடன் சாக்ஷி சண்டையிடுகிறார். 


 
அதாவது நேற்று நடந்த அந்த சேரன் விஷயத்தை குறிப்பிட்டு  கேம் விளையாடியபோது அந்த கேரக்டரில் இருந்து வெளியே வந்தது நீதான் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் சாக்ஷி.  மேலும் கலாச்சார வேறுபாட்டையும் , மொழி பிரச்சனைகளையும் இங்கு கொண்டு வராதே என மீராவை கடிந்துகொள்கிறார் சாக்ஷி. 
 
அப்போது வீட்டிலிருக்கும் சேரனும் மீராவை பற்றி எடுத்தவுடனே பெஸ்ட் ஆஹ் பண்ணினாங்கன்னு பெயர் வருதே எப்படி வருது என கேட்க அதற்கு சாக்ஷி அதை நேரடியாக சென்று அவரிடம் கேளுங்கள் என்று கூறியதோடு எல்லோரும் இங்கு பின்னாடி தான் பேசுவார்கள் என சேரனை மறைமுகமாக திட்டுகிறார். 
 


இதில் மேலும் படிக்கவும் :