சேரனுடன் மீரா எடுத்து கொண்ட பழைய புகைப்படம்: இணையத்தில் வைரல்

Last Modified வெள்ளி, 26 ஜூலை 2019 (20:39 IST)
இடுப்பு குற்றச்சாட்டு புகழ் மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்தே சேரனை அவருக்கு பிடிக்கவில்லை. சேரன் மீது அவ்வப்போது ஏதாவது குற்றச்சாட்டுகளைக் கூறி வந்த மீராமிதுன் நேற்று உச்ச கட்டமாக தன்னுடைய இடுப்பை பிடித்து சேரன் இழுத்ததாகவும், அவருடைய செயலில் ஒரு உள்நோக்கம் இருந்ததாகவும் ஒரு பெண்ணை அவரை அவமதித்து விட்டதாகவும் கூப்பாடு போட்டு பிக் பாஸ் வீட்டையே பரபரப்பை ஏற்படுத்தினார்

அதன்பின் அவரது குற்றச்சாட்டு நடிப்பு என்று சக போட்டியாளர்களுக்கு புரிந்த பின்னர் மீராமிதுன் திடீரென தனது வழக்கமான அழுகை நாடகத்தை தொடர்ந்தார். இருப்பினும் அவர் மீது இருந்த சிறிதளவு இருந்த நம்பிக்கையும் சக போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பறிபோய் விட்டதால் இந்த வாரம் அவருக்கு குறும்படம் மற்றும் கமல்ஹாசனின் கண்டிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் அவருக்கு முன்கூட்டியே சேரனுடன் பகையா? அல்லது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின்னர்தான் சேரனுடன் பகையா? என்பது குறித்த கேள்வி பார்வையாளர்களிடம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சற்று முன் சமூக இணையதளங்களில் சேரனும் மீராமிதுனும் கடந்த சில வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

ஒரு சினிமா விழாவில் சேரனும் மீராமிதுனும் கலந்துகொண்டபோது சேரன் மீராமிதுனுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். ஆக சேரனுக்கும் மீராவுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. இருப்பினும் சேரனுக்கும் மீராவுக்கு ஒருவரை ஒருவர் ஏன் பிடிக்காமல் போனது? பிக்பாஸ் வீட்டில் ஏன் இருவரும் அவ்வப்போதுமோதிக் கொள்கின்றனர்? என்பது புரியாத புதிராக உள்ளது

இந்த புதிருக்கு மீரா அல்லது சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :