திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (14:07 IST)

உன்கூட உள்ள தள்ளி என்னை சாவடிக்குறாங்களே - கடுப்பில் புலம்பும் பாலா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கடைசி இடத்தை பிடித்த டீம் " பாலா , ரம்யா பாண்டியன் , சுச்சி" டீம் தான். இதில் சரியாக விளையாடாத இரண்டு பேரை தேர்வு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள் பாலா மற்றும் சுச்சியை தேர்வு செய்து ரம்யா பாண்டியன் கொஞ்சம் சிறப்பாக விளையாடியதாக கூறினார்கள்.

அதையடுத்து பாலா மற்றும் சச்சி இருவரும் ஓய்வறைக்குள் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாலா கொஞ்சம் கடுப்பாகி தன்னை கண்ணாடி கூண்டிற்குள் காரணத்தை கூறி அடைத்த போட்டியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை சுச்சியிடம் கூற அதற்கு சுசித்ரா எடக்கு முடக்காக பதில் அளித்ததால் கடுப்பாகி, யப்பா... உங்ககூட உள்ள தள்ளி என்னை சாவடிக்குறாங்கப்பா என புலம்பியுள்ளார்.

பாலாவும் சுசித்ராவும் உள்ளே சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் ஷிவானிட பார்வையே சரி இல்லை. பாலாஜி சிசித்ராவுடன் ஓட சும்மா பேசினாலே முகம் வாடிவிடும் இந்த ஷிவானிக்கு. இப்போ ஒண்ணா ஜெயிலில் இருப்பதால் சம்பவங்கள் செமயா இருக்கப்போகுது.  பாலாஜி மற்றவர்களை அனுப்பும் போது தெரியல. ஆனால், இப்போ அவரே போகும் போது மட்டும் வலிக்குதாம்...