திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (18:55 IST)

சுசியை பற்றி உங்க யாருக்குமே எதுவும் தெரியாது: முன்னாள் கணவர்

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுசியை பற்றி உங்கள் யாருக்குமே எதுவும் தெரியாது என்றும் எனக்குத் தான் அவரைப் பற்றி முழுவதுமாக தெரியுமா என்றும் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் தெரிவித்துள்ளார் 
 
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி உள்பட பல ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் கார்த்திக் இவர் சுசித்ரா அவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர் 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்து உள்ள சுசித்ரா குறித்து கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது, ‘சுசியை பற்றி நீங்கள் எல்லோரும் அனைத்தும் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் அவரைப் பற்றி உங்கள் யாருக்கும் எதுவுமே தெரியாது, எனக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியுள்ளார் 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை என்றும் ஒரு மனிதன் தனது வாழ்வில் நடப்பதை கண்ணாடியில் பார்த்து கொள்ளும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் என்றும் அதைத்தான் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு இருக்கிறோமே, பின் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார் அவரது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது