கண்ணாடி கூண்டிற்குள் அடைக்கப்பட்ட பாலா - இனி தரமான சம்பவங்களை பார்க்கலாம்!

Papiksha Joseph| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:04 IST)

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், மணிக்கூண்டு டாஸ்கில் கடைசி இடத்தை பிடித்த டீம் " பாலா , ரம்யா பாண்டியன் , சுச்சி" டீம் தான்.

இதில் சரியாக விளையாடாத இரண்டு பேரை தேர்வு செய்ய பிக்பாஸ் மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுறுத்துகிறார். உடனே இதில் பாலா மற்றும் சுச்சியை தேர்வு செய்த போட்டியார்கள் ரம்யா பாண்டியன் கொஞ்சம் சிறப்பாக விளையாடியதாக கூறினார்கள்.

அதையடுத்து பாலா மற்றும் சச்சி இருவரும் ஓய்வறைக்குள் அடைக்கப்பட்டனர். இந்த வாரம் சுசித்ரா எவிக்ஷனில் வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது . ஏற்கனவே சுச்சி மற்றும் பாலாவை வச்சு லவ் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இப்போ ரெண்டு பேரும் ஒரே அறைக்குள் அடைக்கப்பட்டுள்ளதால். நிறைய சம்பவங்களை எதிர்பார்க்கலாம். அப்போ ஷிவானி கதை அம்பேலா...?


இதில் மேலும் படிக்கவும் :