மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது... இந்தமுறை டைட்டில் வின்னர் இவர் தான்!

Papiksha Joseph| Last Modified சனி, 26 டிசம்பர் 2020 (14:34 IST)

டைட்டிலை வெல்லப்போவது ஆரி என்பது உறுதியாகிவிட்டது
பிக்பாஸ் வீட்டில் வார இறுதி நாள் என்றாலே வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே ஆடியன்ஸ் நிகழ்ச்சிக்காக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கமல் ஹாசனும் பெரிய மீசை வைத்துக்கொண்டு கோபமான முகத்துடன் பேசி வாரம் முழுக்க நடந்த சம்பவங்களை ட்ரைலருடன் விவரிக்கிறார்.
அப்போது ஆரி மற்றும் அனிதாவுக்கு இடையே
நடந்த வாக்குவாதத்தில் ஆரியின் செயலை பாராட்டி அதே நேரத்தில் அனிதாவின் கோபத்தை குறித்து எச்சரிக்கை விடுகிறார். இன்னும் மூன்று வாரம் தான் இருக்கிறது. அவங்க தப்பை அவங்க உணர்கிறார்களோ இல்லையோ நீங்க நல்லா
கரெக்டா புரிஞ்சி வச்சிருக்கீங்க என்பது ஓட்டு போடும் முறையிலே தெரிகிறது என கூறி ஆரி தான் டைட்டில் வின்னர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :