வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (16:24 IST)

ரெண்டு பொண்ணு விட்டு கொடுத்ததால் தான் நீ புடிச்ச... முதல் இடத்துக்கு அடித்துக்கொள்ளும் ஆரி, ரியோ!

பிக்பாஸ் 4 சீசனில் ஸ்வாரஸ்யமாக என்ன தான் நடந்தது என்றே தெரியவில்லை. நிகழ்ச்சியும் முடியப்போகுது ஆனால், சம்பவம் ஒன்னும் சிறப்பானதாக இல்லை. டாஸ்க்கும் உருப்படியாக ஒன்றும் கொடுக்க மாட்றாங்க. இப்படி போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலை கூட ஒருத்தரும் பார்க்கமாட்டாங்க.
 
கடந்த சில நாட்களாகவே பிளே ஸ்கூல் பாப்பா விளையாடும் கேமை தேடி பிடித்து டாஸ்க் என்று கூறி பார்க்கும் ஆடியன்ஸை கடுப்பேத்துறார் பிக்பாஸ். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களை தூங்கவிடாமல் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர்.
 
அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் ஈடுபாடு, பங்களிப்பு, போட்டியிடும் தன்மையை மனதில் கொண்டு தங்களை தாங்களே வரிசைப்படுத்திக்கொள்ளவேண்டும் எனபது தான் இந்த டாஸ்க். இதற்கு முன்னரும் இது போன்று தகுதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்திக்கொண்ட போட்டியாளர்கள் சாண்டியிட்டுக்கொண்டனர். அதே போல் இப்போதும் இந்த டாஸ்கில் ரியோ மற்றும் ஆரிக்கு இடையே வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது.
 
ஆம், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் ஆரி மற்றும் ரியோ இருவரும் முதல் இடத்திற்காக அடித்துக்கொள்கின்றனர். அப்போது ஆரி ரியோவிடம், இரண்டு பொண்ணுங்க உனக்கு விட்டு கொடுத்தாங்க. அதனால் தான் நீ பாலை புடிச்ச... எனவே முதல் இடத்திற்கு நீ தகுதியானவர் அல்ல நான் தான் முதலில் வரவேண்டும் என வாக்குவாதம் செய்கிறார். எனவே இன்றைய எபிசோடில் ஆரி மற்றும் ரியோவின் மோதலை பார்க்கலாம்.