தூங்காதே தம்பி தூங்காதே.... அழுமூஞ்சி அனிதா கிட்ட இருந்து இன்னிக்கி சம்பவம் இருக்கு!
பிக்பாஸ் 4 சீசனில் ஸ்வாரஸ்யமாக என்ன தான் நடந்தது என்றே தெரியவில்லை. நிகழ்ச்சியும் முடியப்போகுது ஆனால், சம்பவம் ஒன்னும் சிறப்பானதாக இல்லை. டாஸ்க்கும் உருப்படியாக ஒன்றும் கொடுக்க மாட்றாங்க. இப்படி போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலை கூட ஒருத்தரும் பார்க்கமாட்டாங்க.
கடந்த சில நாட்களாகவே பிளே ஸ்கூல் பாப்பா விளையாடும் கேமை தேடி பிடித்து டாஸ்க் என்று கூறி பார்க்கும் ஆடியன்ஸை கடுப்பேத்துறார் பிக்பாஸ். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களை தூங்கவிடாமல் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் ஈடுபாடு, பங்களிப்பு, போட்டியிடும் தன்மையை மனதில் கொண்டு தங்களை தாங்களே வரிசைப்படுத்திக்கொள்ளவேண்டும் எனபது தான் இந்த டாஸ்க். இதற்கு முன்னரும் இது போன்று தகுதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்திக்கொண்ட போட்டியாளர்கள் சாண்டியிட்டுக்கொண்டனர். அதே போல் இப்போதும் இந்த டாஸ்கில் ரியோ மற்றும் ஆரிக்கு இடையே வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது.
மறுபடியும் Ranking வைத்துள்ளதால்அழு மூஞ்சி அனிதா கிட்ட இருந்து இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு... அது சரி, இந்த ஒர்த் இல்லாத டாஸ்க்கு தான் தூங்காமல் முழிச்சுகிட்டு இருக்கணுமா?அடேய் நீங்க கொடுக்கிற டாஸ்க்கிற்கு தூங்குவதே நல்லது. பிக்பாஸ் பாக்குறவங்க எல்லோருக்கும் ஒரு டாஸ்க் யாரு சரியா பிக்பாஸ் மண்டையிலே குறி பார்த்து கல்லால் அடிக்கிறதுன்னு ஆரம்பிக்கலாமா ...? போங்க டா... நீங்களும் உங்க பிரமாண்ட டாஸ்க்கும்.