திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (14:06 IST)

சொம்பு தூக்குனத சொல்லவே இல்ல... பாலாவிடம் எகிறிய அனிதா!

பிக்பாஸ் 4 சீசன் எப்படியோ இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் உள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக்கொண்டு டாஸ்களை விளையாடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பால் கேட்ச் என்ற கேம் கொடுக்கப்பட்டது.
 
இந்த டாஸ்கில் சிறப்பாக விளையாடியது யார்? என்ற அடிப்படையில் ரேங்கிங் வைத்தனர். அப்போது முதல் இடத்திற்கு தகுதியானவன் நான் தான் என கூறி ஆரி மற்றும் ரியோ சண்டையிட்டுக்கொண்டனர். ஆனாலும், ஆரிக்கு 5வது இடம் தான் கொடுத்தாங்க . 
 
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் பாலாவின் நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை என கூறிய அனிதா கேபி சொம்பு தூக்கினால் மட்டும் நேரடியா சொன்னீங்க ஆனால், ஷிவானிக்கு மட்டும் அப்படி சொல்லவில்லையே என கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது. பாலாவை எதிர்த்து கேள்வி கேட்டதும் ஷிவானி செம கடுப்பாகிவிட்டார்.