பிக்பாஸ் 3: 4-ஆம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன...?

Last Updated: வெள்ளி, 28 ஜூன் 2019 (12:16 IST)
இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இதில் நமக்கு தெரிந்த பிரபலங்கள் பலரும் உள்ளனர். பாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா,  விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் இம்முறை பிக்பாஸ்  போட்டியாளர்களாக உள்ளனர்.
போட்டியாளர்கள் நான்காம் நாள் வீட்டுக்குள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய புரொமோக்கள் நேற்று ஒளிபரப்பானது. அதில் சேரன், சரவணன், மதுமிதா, தர்ஷன் ஆகியோர் தங்களது வாழ்வில் நடந்த விஷயங்களை மற்ற போட்டியாளர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வது  போல் காண்பிக்கப்பட்டது.
 
4ஆம் நாள் காலை
 
எப்பவும்போல காலை ஒரு பாடலுடன் ஆரம்பிக்கிறது. அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடுகின்றனர். ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டில்  ஏதாவது ஒரு டாஸ்க் வரும். அதுபோல இன்று மீரா மிதுனுக்கு அனைவரையும் கேட் வாக் செய்யவைக்க வேண்டும் என்பதுதான். இதில்  அனைவரும் கேட் வாக் செய்கின்றனர். ஆனால் மோகன் வைத்யாவுடன் மட்டும் தனியாக ஒரு வாக் செய்கிறார் மீரா மிதுன்.
 
--------------
 
மீரா மிதுன் பாத்திமா பாபுவிடம் என்ன பார்த்தாவே எல்லோருக்கும் ஒரே பொறாமையா இருக்கு என்று புலம்ப, அதற்குள் அபிராபி தண்ணீர்  கொடுத்து சமாதானம் செய்கின்றனர். கூடவே ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் வருகின்றனர். அதில் வனிதா மற்றும் சேரனும் சமாதானம் செய்ய  முயல்கின்றனர். சேரன் இனிமேல் இந்த வீட்டில பழைய விஷயங்களை யாரும் பேசக் கூடாது என்று கூறி அந்த விஷயத்தை அதோடு  முடிக்கிறார்.
 
ஒரு டாஸ்க் ஒன்று வருகிறது. அதில் அனைவரும் அமர்ந்திருக்க, ஒருவர் மட்டும் மேடையில் வந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள  பேப்பரில் எழுதியுள்ளவற்றை படித்து அதன்படி செய்ய வேண்டும்.
 
சேரன்
 
முதலில், சேரனுக்கு ஒரு சீட்டில் உங்களுக்கு மறக்கமுடியாத நாள் எது என வருகிறது. அதற்கு சேரன் தன் வாழ்க்கையில் தன்னுடைய  மனைவியின் பிரவத்தின்போது கையில் காசு இல்லாமல் அவஸ்தைபட்டதையும், மனைவிக்கு வந்த வலியை பிரசவ வலி என்று கூட  தெரியாமல் இருந்ததாகவும் கூறினார். மேலும் பணத்தை நண்பர்களிடம் வாங்கி வருவதற்குள் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்ததை கண்டு  மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார். எல்லா துன்பத்தின் இறுதியிலும் ஒரு சந்தோஷம் (நன்மை) இருக்கதான் செய்யும் என்று கூறினார்.
 
அடுத்ததாக தர்ஷனுக்கு, உங்கள் மனதை புண்படுத்திய நபர் மற்றும் குடும்பத்தில் யாருடைய இழப்பு உங்களை பாதித்தது என்று  கேட்டப்படுகிறது. அதற்கு தர்ஷன் தன் வாழ்க்கையில் எதுவும் எனக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்த  நிலைமைக்கு வந்ததாகவும் கூறுகிறார்.
 
மதுமிதா
 
வீட்டில் உள்ளவர்கள் பற்றியும், வெளியில் சொல்ல முடியாத ரகசியத்தை பற்றி சொல்ல தைரியம் உண்டா? என்றும் கேட்டப்படுகிறது. எனக்கு அக்கா 3 பேர். என் தந்தை அதிகம் குடிப்பதால் நான் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். இதனால் எனக்கு தந்தை பாசம்  என்ன என்பதே தெரியாமல் வளர்ந்தேன், என் அம்மா எங்களை ஆண்வாடை படாமலே ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும் கூறினார்.  மேலும் 4 பெண் பிள்ளைகளை வைத்துகொண்டு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், பள்ளிக்கு செல்லும்போது அனைத்து மாணவர்களுக்கு அவரவர்  பெற்றோர்கள் வருவார்கள், அதோடு இல்லாமல் என் தந்தை எனக்கு இதை வாங்கி கொடுத்தார் அதை வாங்கி கொடுத்தார் என நண்பர்கள்  கூறும்போது, தந்தையின் புகைப்படத்தை கூட இதுநாள்வரை பார்க்காத எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்றும் கூறி அழுதார்.

மேலும்  கூறுகையில் துக்கம் தொண்டையை அடைத்து கொண்டு, அழுவாறே பேசினார். இதை பார்த்த அனைத்து ஹவுஸ்மெட்ஸ்களும் கண்ணீர்  விட்டனர். பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்களையும் கண்ணீர்விட வைத்துவிட்டார், ஏனெனில் இவருக்கு பின்னால் இப்படி ஒரு சோகக் கதை  இருக்கா? என்று தோன்றியது. முடிவில் சாண்டி மாஸ்டர் மதுமிதாவை அழைத்து கொண்டு மோகன் வைத்யாவிடம் இது உன் அப்பா என்று  சொல்ல, மோகன் வைத்யாவும் உணக்கு என்னவேணும் சொல்லு நான் வாக்கி தருகிறேன் என்று சொல்கிறார்.
 
சரவணன்
 
வாழ்க்கையில் நடந்த ஒரு ரகசியத்தை சொல்ல தைரியம் உண்டா? உங்கள் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் பற்றி சொல்லுங்க என்று  கேட்டகப்பட்டது. அப்போது சரவணன் எனக்கு காதல் திருமணம்தான் நடந்தது. அப்போது என்னிடத்தில் 5 பைசாகூடா இல்லை. தாலி முதல்  கொண்டு அனைத்து செலவுகளையும் எனது காதல் மனைவிதான் செய்தார். எனக்கு குழந்தை இல்லாததால் பல அவமானங்களை சந்தித்தேன். அதனால் எனது பெற்றோர்கள் 2-வது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினர். ஆதலால் 2-வது திருமணமும், எனது முதல் மனைவி சம்மதத்துடன், புடவை தாலி அவரே வாங்கி கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் என்று கூறி அழுதார். மேலும் உடன் பிறந்தவர்களால்  ரொம்ப கஷ்டப்பட்டாதவும், காசு இல்லை என்றால் ஒன்றும் இல்லை. அதனாலதான் சொல்றேன். என்ன மாதிரி முட்டாளா இல்லாம பணத்தை குருவி மாதிரி சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
 
மேலும் தற்போது தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவனுக்கு தற்போது 8 மாதம் ஆகிறது. அவனுக்காக நான் வாழவேண்டும் என்று  கூறுவதோடு பிக்பாஸ் 4-ஆம் நாள் நிறையுற்றது. இனி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் காத்திருகின்றன என்பதில்  சந்தேகம் இல்லை என்றே சொல்லவேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :