வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (13:44 IST)

ஏப்ரல் 12 ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் பீஸ்ட்… எங்கு தெரியுமா?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.

ஏற்கனவே படத்தின் வியாபாரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பித்து விட்டது. தமிழ் திரையரங்க உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் இப்போது வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐங்கரன் நிறுவனம் தமிழில் படங்களை தயாரித்து வந்த நிலையில் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஏப்ரல் 12 ஆம் தேதியே படத்தின் ப்ரீமியர் ஷோ நடக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்களுக்கு முன்பாகவே அமெரிக்க ரசிகர்கள் பீஸ்ட் படத்தை பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.