மீண்டும் ஒரு பேன் இந்தியா திரைப்படம்… கைகோர்த்த லைகர் கூட்டணி – வைரலான போஸ்டர்!
விஜய் தேவாரகொண்டா மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்னாத் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவாரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போது படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. நாளை படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறது. இவர்களின் லைகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது இவர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ முதல் லுக் போஸ்டர் இன்று வெளியானது. படத்துக்கு JGM என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ம் விண்வெளியை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.