புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (09:21 IST)

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் புது அவதாரம்

இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வடசென்னை பாகம் 1 ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பின்னர் மீண்டும் அசுரன் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக் கடந்த 10 நாட்களாக கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் பாலாஜி சக்திவேலைப் படக்குழு அனுகியிருக்கிறது. பலப் பேர் இதற்கு முன்னர் நடிக்க அழைத்தும் மறுத்து வந்த பாலாஜி சக்திவேல் இம்முறை வெற்றிமாறனின் அழைப்பை தட்ட முடியாமல் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து இன்னும் சில தினங்களில் பாலாஜி சக்திவேல் படப்பிடிப்பிற்காக கோவில்பட்டி செல்ல இருக்கிறார். பாலாஜி சக்திவேல் தான் இயக்கிய சாமுராய், காதல், கல்லுஅரி, வழக்கு எண் 18/7 ஆகியப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றவர்.

ஏற்கனவே இந்தப் படத்தில் கருணாஸின் மகன் கென் தனுஷின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.