தனுஷ் கையில் 'சர்வம் தாளமயம்' இன்று மாலை வருது சூப்பர் அப்டேட்

VM| Last Updated: திங்கள், 28 ஜனவரி 2019 (21:17 IST)
சர்வம் தாளமயம் படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.


 
ஜீவி பிரகாஷ் இசைக்கலைஞனாக நடித்துள்ள சர்வம்  தாளமயம் படத்தினை  ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இதில். ஜீ.வி.பிரகாஷ் உடன், நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனனின் MINDSCREEN நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
 
இப்படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :