திங்கள், 31 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (09:43 IST)

மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா வந்தது இதற்காகதானா?

ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்நிலையில் ஒடிசாவில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பை தற்போது படமாக்கி முடித்துள்ளார் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவைக் கொண்டுவந்தது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சீரிஸ்களில் நடித்து உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அதனால் அவர் படத்தில் இருந்தால் உலகளவில் படத்தை மார்க்கெட் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.