விக்ரம்பிரபு மகனுக்கு வாள் பரிசளித்த ‘பாகுபலி’ பிரபாஸ்
விக்ரம்பிரபு மகனுக்கு, வாள் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் ‘பாகுபலி’ பிரபாஸ்.
சாகசம் செய்யும் எந்த ஹீரோவைத்தான் குழந்தைகளுக்குப் பிடிக்காது? அப்படி ஹாலிவுட், பாலிவுட் சூப்பர் மேன்களைத் தாண்டி. சமீபத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த ஹீரோ ‘பாகுபலி’ பிரபாஸ். நடிகர் விக்ரம்பிரபுவின் மகன் விராட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.
விராட்டின் பிறந்தநாளை முன்னிட்டு, பொம்மை வாள் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் பிரபாஸ். அவருடைய கையெழுத்துடன் கூடிய அந்த வாளைப் புகைப்படமெடுத்து, ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் விக்ரம்பிரபு.