பாகுபலி 2' சாதனையை முறியடித்ததா விவேகம்?


sivalingam| Last Modified திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (22:03 IST)
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த 'பாகுபலி 2' படத்தின் இரண்டு நாள் வசூலை அஜித்தின் விவேகம் முறியடித்துவிட்டதாக பிசினஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.


 
 
பாகுபலி 2 படத்தின் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளின் பதிப்புகள் முதல் இரண்டு நாட்களில் ரூ.65 கோடி வசூலித்தது. இந்த நிலையில் அஜித்தின் 'விவேகம்' இரண்டு நாட்களில் ரூ.66 கோடி வசூல் செய்து பாகுபலி 2' சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பை சேர்த்தால் அந்த படம் இரண்டு நாட்களில் ரூ.80.75 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விவேகம் திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டாலும் இன்று திங்கட்கிழமையின் வசூல் பெருமளவு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பாகுபலி 2' படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி என்பதும் விவேகம் படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 


இதில் மேலும் படிக்கவும் :