பாகுபலி 2 வசூலை தாண்டியதா விவேகம் படம்?

Sasikala| Last Modified செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (15:16 IST)
அஜித்தின் விவேகம் கடந்த 24-ம் தேதி வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியான போதிலும் வசூலில்  பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

 
சென்னையில் விவேகம் படம் புதிய சாதனை படைத்துள்ளதை போல், இதுவரை எந்தவொரு தமிழ் படமும் தொடர்ந்து நான்கு  நாட்களில் தலா ரூ. 1 கோடிக்கும் மேல் வசூலித்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பாகுபலி 2  படத்தின் வசூலை தாண்டியுள்ளது அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம்.
 
பாகுபலி 2 சென்னையில் மொத்தமாக ரூ.8.25 கோடி வசூலித்தது. இப்படம் 2-வது வார இறுதி வசூல் நிலவரத்தின்படி தாண்டியுள்ளது. கடந்த ஞாயிறு வரை விவேகம் சென்னையில் ரூ. 8.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது இதுவே  முதல்முறை என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :