திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:05 IST)

பொங்கல் ரிலீஸ் சந்தேகம்தான்…. மீண்டும் தள்ளிப் போகுமா அயலான்?

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்துக்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை மற்றும் கிராபிக்ஸ் பணிகளின் தாமதம் காரணமாக இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு லால் சலாம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.