ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (07:49 IST)

3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகிறதா அயலான்?

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

சமீபத்த்ல் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். படத்தின் டிரைலர் ரிலீஸான பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் இப்போதைக்கு பேச்சுவார்த்தை தொடக்க கட்டத்தில் மட்டுமே உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.