கனா படத்தை காப்பியடித்த அட்லீ! - தளபதி 63 ஸ்டோரி லைன் ரிவீல் ?
விஜய்யின் தளபதி 63 படத்தின் ஒன் லைன் ஸ்டோரி வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
சர்கார் படத்துக்குப் பிறகு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் பேவரைட் பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதுகிறார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் அண்மையில் பூஜையுடன் துவங்கியது. இதற்கிடையே நடிகர் விஜய் திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கின் நிர்வாக இயக்குநரைச் சந்தித்து பேசியிருந்தார். அப்போது, “இயக்குநர் அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும்” என்று நடிகர் விஜய் கூறியதாக அவர் தெரிவித்தார்.
தளபதி 63 படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது அது உண்மையாகியுள்ளது . ஆம் , இந்த படம் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய படம் என்றும் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக 16 பெண்கள் இந்த படத்தில் தேர்வு செய்யபட்டுள்ளனர் .பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இந்த படம் அப்படியே சிவகார்த்திகேயனின் கனா படத்தின் சாயலில் அமைந்துள்ளது எனபது தெரிகிறது.
சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தில் அவர் பெண்கள் கிரிக்கெட்டின் கோச்சாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனதுடன் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் கல்லா கட்டியது.
இந்நிலையில் தற்போது அதே பாணியில் விஜய்யை வைத்து அட்லீ, தளபதி 63 இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவலாக வலம் வருகிறது.
அட்லீ "கனா" படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி தளபதி- 63யை எடுக்கிறாரோ என்ற ஐயம் நமக்குள் எழுகிறது. அப்படி இருப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அட்லீயை பற்றி தான் நமக்கு தெரியுமே....!
இருந்தாலும் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவந்து தளபதி 63யின் நிலைமை என்ன என்பது குறித்து நமக்கு தெரியவரும்.