நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகரானார் !
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் விஜய். இவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு தன் மகனை வெள்ளித்திரையில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார். அதில் சஞ்சய் நடனமாடினார். பின்பு அவர் திரைப்படம் சார்ந்த படிப்புக்காக வெளிநாடு சென்று படிப்பதாக தகவல் வெளியானது. தற்போது நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் மற்றும் நடிகராக புதுஅவதாரம் எடுத்ததுள்ளார்.
ஆம்! சஞ்சய் தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். ஜங்சன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் 7 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது. ஒரு கல்லூரியில் நடைபெறும் ராக்கிங் பற்றிய கதை என்று தெரிகிறது.