'விஸ்வாசம்' படக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன 'விஜய் 63' படக் குழுவினர்...
விஸ்வாசம் படத்தின் டிரைலர் இன்று மதியம் வெளியானது. டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்ததால் சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்கள் இதைக் கொண்டாடி, டிரென்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசம் டிரைலருக்கு, விஜய் 63 படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் தமிழ் உரிமையை கேஜிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
வரும் பொங்களுக்கு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி யுடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று வருகிறது. இதை சத்யஜோதி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
விஸ்வாசம் படக் குழுவிற்கு, விஜய் 63 படக்குழுவினர் மற்றும் அதன் தயாரிப்பாளர் வாழ்த்து கூறியுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.