செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 1 ஜனவரி 2019 (11:24 IST)

சர்கார் வசூல் இவ்வளவு தானா! ரசிகர்கள் அதிர்ச்சி

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வந்த படம் சர்கார். இப்படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகின.  
 
அதேபோல் பல பல பாக்ஸ் ஆபிஸ் தளங்களும் சர்கார் வசூல் சூப்பர் என்று தான் சொல்லின. ஆனால், பிரபல சினிமா டிக்கெட் முன் பதிவு தளமான புக் மை ஷோ  ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
 
இதில் சர்கார் படத்துக்கு புக் மை ஷோ மூலம் ரூ.67 கோடிதான் புக்கிங் நடந்துள்ளதாக கூறியுள்ளது. ரூ.160 கோடி வசூல் செய்த காலாவே ரூ.63 கோடி புக் மை ஷோவில் வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ரிப்போர்ட்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.