காங்கிரஸ் வர்த்தக பிரிவு சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

KARUR CHILDRENS DAY
anandakumar| Last Updated: புதன், 14 நவம்பர் 2018 (19:51 IST)
கரூர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு சார்பில் இன்று மறைந்த முன்னாள் பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்த தினம்கொண்டாடப்பட்டது. கரூர் அருகே உள்ள சோமூர் உயர்நிலைப்பள்ளியில்கரூர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் லியோ ப.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை மல்லிகா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில்., கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ர.சின்னசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு   பேசினார். 
 
மேலும்,இந்நிகழ்ச்சியில்., முன்னாள் பாராளுமன்ற பார்வையாளர் சேங்கல் மணி,மகிளா காங்கிரஸ் தலைவி உமாமகேஸ்வரி, கரூர் காங்கிரஸ் கமிட்டி நகரதலைவர் ரா.செளந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில்  முன்னாள் பாரத பிரதமர் நேருவின் வாழ்க்கைக் குறிப்புகளை மாணவ, மாணவிகள் வாழ்த்தி பேசினார்கள்.

பின்னர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாகவும், குழந்தைகள் தினத்தினை முன்னிட்டும், கரூர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு சார்பில் லியோ ப.சதீஸ்குமார் அனைவருக்கும் புதிய எழுத்து உபகரணங்கள் மற்றும் ஜாமிண்டிரி பாக்ஸ்கள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். 

 
மேலும்  இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :