1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. AR Rahman Program Organizer Hemant Explained

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் விளக்கம்

AR Rahman show
.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி  நேற்று நடைபெற்ற நிலையில், இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி   பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்  விளக்கம் அளித்திருந்தார்.

அதில், '' நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு   பொறுப்பேற்க்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரம்  மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள இன்று நான் பலிகடா ஆகிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  இன்று இரவுக்குள் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் தெரிவிக்கப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்ற நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், நடந்தது என்ன என்பது குறித்து, இன்றிரவுக்குள் விளக்கம் அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் கூறியதாவது: ‘’ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் அத்தனைக்கும் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து வைத்திருந்த நிலையில்,  நிகழ்ச்சி  நடந்த இடத்தில், ஒரே பகுதியில் அத்தனை பேரும் குவிந்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்தோம்.  5ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாகத் தரப்பட்டது; நிகழ்ச்சிக்கு உள்ளே வரமுடியாதவர்கள் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் எனவும்,  நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்’’ என்று  என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கமல் மணிரத்னம் படத்தில் இணையும் இரண்டு பிரபல ஹீரோக்கள்!