1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. gdn movie 2 days collection

2 நாட்களில் ரூ.1.63 கோடி வசூல்.. ஜிடிஎன் படத்தின் நிலவரம் இதுதான்!

ஜிடிஎன் collection
இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்  ஜிடிஎன் (G.D.N). இப்படத்தில் நடிகர் மாதவன், ஜி.டி.நாயுடுவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை  ரங்கூன்  படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.
 
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கியமான சம்பவங்கள், அவரது கண்டுபிடிப்புகள், சாதனைகள் மற்றும் அவருடைய தனித்துவமான சிந்தனைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை சினிமா வடிவில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
 
மாதவன் கதையின் மைய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் சத்யராஜ், துஷாரா விஜயன், ஜெயராம், வினய், பிரியாமணி, கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்காக நடிகர்களின் தோற்றம் மற்றும் கதாபாத்திர வடிவமைப்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜி.டி.நாயுடுவாக மாதவனின் தோற்றம் படத்தின் மீது ஆரம்பத்திலேயே கவனம் ஈர்த்தது.
 
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 7-ம் தேதி  ஜிடிஎன்  திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.
 
இதனால் தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என படக்குழு எதிர்பார்த்தது. குறிப்பாக, மாதவனுக்கு தென்னிந்தியாவின் பல்வேறு மொழி ரசிகர்கள் இருப்பதால், பான்-இந்தியா அளவில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
 
இந்நிலையில்,  ஜிடிஎன்  திரைப்படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் உலகளவில் 2 நாட்களில் ரூ.1.63 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
ஃபுல் ஆக்‌ஷன்.. பக்கா மாஸ் சீன்ஸ்!.. டாக்சிக் டிரெய்லர் வீடியோ ரிலீஸ்...