1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actress-mrunal-thakur-slams-dating-rumours-with-cricketer-yashasvi-jaiswal

ப்ரோ.. கொஞ்சம் ரிலாக்ஸ்! – யஷஸ்வியுடன் காதலா? மிருணாள் தாகூர் கொடுத்த பதில்!

மிருணாள் தாகூர்

பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கஃபே ஒன்றில் மிருணாள் தாகூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் காணப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் மிருணாள் கஃபேவில் இருந்த நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு யஷஸ்வி அங்கிருந்து வெளியேறியதாக தெரிந்தது.

இதையடுத்து, இருவரும் ஒரே இடத்தில் இருந்ததை வைத்து அவர்கள் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிடத் தொடங்கினர். இதனால் மிருணாள் தாகூர் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் காதல் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது.