வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (13:34 IST)

'' எங்கள் தலைகளை தேவதைகள் கோதுகின்றன''- வைரமுத்து டுவீட்

dharmadhurai
தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர் சீனு ராமசாமி. இவர்,  கூடல் நகர், தென்மேற்கு பருவக் காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுறை, கண்ணே கலைமானே மற்றும் மாமனிதன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில்,  சினிமா இயக்குவது மட்டுமின்றி, கவிதை எழுவதும், சமூக கருத்துகளை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

இந்த  நிலையில்,  சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு பிறகு வெளியான படம்   மாமனிதன் .

இந்த நிலையில், விஜய்சேதுபதி- தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான தர்மதுறை படத்தில் இடபெற்ற ''ஆண்டிப்பட்டி கணவாக்காத்து'' என்ற பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து, கவிப்பேரரசு வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில்,

''சீனுராமசாமி இயக்கிய
யுவன்சங்கர்ராஜா இசைத்த
'தர்மதுரை' எனக்கு
ஏழாம் தேசிய விருது
பெற்றுத் தந்த படமாகும்

அதில் இடம்பெற்ற
'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து'
10கோடிப் பார்வையாளர்களைக்
கடந்திருப்பது
பெருமை மற்றும் பெருமிதம்

எங்கள் தலைகளை
தேவதைகள் கோதுகின்றன'' என்று தெரிவித்துள்ளார்.