இனிமேல் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற மாட்டாரா சீனு ராமசாமி?
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவானது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ரிலீஸுக்குப் பிறகு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்ய நாட்டில் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகி விருதை வென்றது.
சமீபத்தில் கூட சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சீனுராமசாமி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “இனிமேல் விஜய் சேதுபதியோடு இணைந்து பணியாற்றும் சூழல் இல்லை” எனப் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் அழகான மெல்லுணர்வு படங்களைக் கொடுத்து வந்த இந்த கூட்டணி மீண்டும் இணையாது என்பது சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.