வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 29 மே 2023 (09:03 IST)

திடீர்னு மோடி ஆதரவாளராக மாறிய பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்!

இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை மற்றும் மாமனிதன் என சொல்லத்தக்க படங்களை எடுத்தவர். அவர் எப்போதும் தன்னை மாநிலங்களின் உரிமை குறித்து பேசுபவராகவும், திராவிட இயக்க ஆதரவாளராகவும் காட்டிக் கொண்டவர்.

இந்நிலையில் நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பின் போது நடந்த செங்கோல் வழங்கும் நிகழ்வைப் பாராட்டியும், மோடியைப் பாராட்டியும் அவர் ட்வீட் செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது டிவீட்டில்

“தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர்.
இன்று இந்தியாவின் புதிய
பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம்
செங்கோலை
போற்றும்
பிரதமர் @narendramodi
அவர்களே
உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்
பெரிய விசயம்” என நன்றி கூறும் விதமாக தெரிவித்துள்ளார்.