வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (19:18 IST)

சம்பளம் வாங்காமல் நடித்த விஜய் சேதுபதி….எந்த படத்தில் தெரியுமா?

இயக்குனர் சீனு ராமசாமியின் தம்பி ஆர்.விஜயகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தம்பி ஆர். விஜய்குமார். இவர் அழகிய கண்ணே என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் திண்டுகல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக சஞ்சிதா நடிக்கிறார்.

இவர்களுடன் இணைந்து சிங்கமுத்து, ஆண்ட்ரோஸ், சரவண சக்தி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் ஆர். விஜயகுமார்  கூறியதாவது:  ‘’சீனு ராமசாமி இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக இருந்து இப்போது இயக்குனராகி உள்ளேன். ஒரு இளைஞர் இயக்குனராகும் கனவில் சென்னை வருகிறார். அவர் சந்திக்கும் பிரச்சனைகள். முடிவு என்ன? என்பது பற்றிய கதை இது. இதில், சிறப்பு தோற்றத்தில், விஜய்சேதுபதி, பிரபு சாலமன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் நடித்ததற்காக விஜய்சேதுபதி சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் ‘’ என்று தெரிவித்துள்ளார். 

இப்படத்திற்கு என்.ஆர்.ரகு நந்தன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.