1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 பிப்ரவரி 2025 (11:00 IST)

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். இதனால் அவர் மேல் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து மற்றொரு பட நிகழ்ச்சியில் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் தான் சினிமாவில் இருந்து விரைவில் விலகவுள்ளதாகவும் பேசியிருந்தார்.

அது பற்றி சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “நான் மிஷ்கின் அப்படி பேசியதும் அவருக்கு போன் செய்து திட்டினேன். ஏண்டா நீ என்னென்னலாம் தமிழ் சினிமாவில் பண்ணிருக்க தெரியுமா? நீ பாட்டுக்கு சினிமாவ விட்டுப் போறேன்னு சொல்ற!’ என்று கேட்டதாகக் கூறியுள்ளார்.