திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (18:04 IST)

திருமணமான இரண்டே மாதத்தில் ஆல்யா - சஞ்சீவ் தம்பதி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். 
 
இந்நிலையில் தற்போது திருமணமான இரண்டே மாதத்தில் இந்த தம்பதி புது வீடு ஒன்றை கட்டி  கிரக பிரவேசம் செய்துள்ளனர். அதனை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர்.