ரகசிய திருமணம் செய்துகொண்ட ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடி! -

Papiksha| Last Modified வியாழன், 12 செப்டம்பர் 2019 (15:35 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 


 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் தற்போது யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துள்ளனர். 
 
இந்த தகவலை தற்போது சஞ்சீவ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " ஆல்யாவின் பிறந்த நாள் அன்றே தங்களது திருமணம் நடந்து முடிந்துவிட்டதாகவும்,  சில பிரச்சனைகளால் அறிவிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்களும் நண்பர்களும் அதிர்ச்சி ஆகிவிட்டனர் . பின்னர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :