வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (13:45 IST)

குடும்பத்துடன் நியூ இயற் கொண்டாடிய அஜித் - கிடுகிடுன்னு வளர்ந்திருக்கும் மகள்!

அஜித்தின் நியூ இயற் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
 
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் தமிழில் சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார். இவருக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வரும் ஜனவரி 11ம் தேதி அவரின் துணிவு படம் திரைக்கு வரவிருக்கிறது. 
  
இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
அதில் அவரது மகள் மிகவும் வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ளதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகிவிட்டனர். ஷாலினி இன்னும் பார்ப்பதற்கு குழந்தை போலவே தான் இருக்கிறார். தல செம கூலாக குட்டி ஸ்மையிலுடன் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.