ஷாலினி அஜித் வெளியிட்ட புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்!
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஷாலினி குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புத்தாண்டை அஜித் மற்றும் குடும்பத்தினரோடு புத்தாண்டை கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.