திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (09:01 IST)

3.4 கோடி பார்வையாளர்களைக் கடந்த துணிவு டிரைலர்!

துணிவு படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்றது. பழைய படங்களில் அஜித் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரைலர் உறுதி செய்தது.

இதையடுத்து வெகுமக்களின் பெரிய பாராட்டுகளைப் பெற்றிருக்கும் இந்த டிரைலர் இணையத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 3.4 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.