செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : சனி, 31 டிசம்பர் 2022 (19:33 IST)

என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? ‘துணிவு’ டிரைலர்

என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? ‘துணிவு’ டிரைலர்
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் இருக்கும் இந்த டிரைலரில் அஜித் பேசும் அசத்தலான வசனங்கள், வங்கிக் கொள்ளை அடிக்கும் காட்சிகள், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி அஜித்தை பிடிக்க முயற்சிக்கும் காட்சிகளில் வங்கியில் இருந்து கோடிக்கணக்கான பணம் அஜித்தால் கொள்ளை அடிக்கப்படும் காட்சிகள் என விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன 
 
மேலும் மஞ்சு வாரியரின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கடலில் படகுகள் துரத்தப்படும் காட்சிகள் என மொத்தத்தில் முழுக்க முழுக்க இது ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது
 
குறிப்பாக அஜித் தனது பாணியில் பேசும் என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? என்ற வசனம் டிரைலரின் அசத்தலான காட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது 
 
மொத்தத்தில் இந்த படத்தின் டிரைலர் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Edited by Mahendran