1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (10:52 IST)

15 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்கள்: ‘துணிவு’ டிரைலர் சாதனை!

thunivu
அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் வெளியாகி 15 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அஜித் நடிப்பில் ஹரி இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாக்கிய துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்றும் இந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு 7 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
 
இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த டிரெய்லரை யூடியூப்பில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதிகமாக வைரலாகி வருவதை அடுத்து அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva