வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 31 டிசம்பர் 2022 (19:30 IST)

அஜித்குமாரின் ''துணிவு'' பட டிரைலர் ரிலீஸ்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய  அஜித்குமாரின் துணிவு பட டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் துணிவு.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த போனிகபூர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள  பகவதி பெருமாள், மோகனசுந்தரம், அஜய், ஜான் கொகைன், சமுத்திரக்கனி, ஜிஎம் குமார், வீரா, மஞ்சுவாரிய  ஆகியோர்களின் கேரக்டர் குறித்த அறிவிப்பு  வெளியான வண்ணமுள்ளது.

‘ஆக்சன் படமான இப்படம் நிறைய டீட்டெயிலுடன் அட்டகாசமாக உருவாகியுள்ளதாக’ இப்படத்தில் நடித்துள்ள சுந்தர் கூறியிருந்தார்.

இப்படத்திற்கு யு-ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும்  நிலையில், இப்படத்தின் டிரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இதில், ஒரு வங்கியின் நுழைந்து கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பலின் தலைவனாக அஜித்குமார் , அங்குள்ள அதிகாரிகளை, பாதுகாவலர்,  மக்களை மிரட்டி, பணத்தை கொள்ளையடித்து எப்படி தன் குழுவுடன் தப்பிச் சென்றார் என கதை பின்னப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போலீஸ் அதிகாரியாக சமுத்திரடி  நடித்துள்ளார், சில நிமிடங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த டிரெயிலரை பார்த்துள்ளனர், இது வைரலாகி வருகிறது.

இந்த டிரைலர் துபாயின் புர்ஜ் கலீபா, மற்றும் டைம் சதுக்கத்திலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.