புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2019 (13:10 IST)

’அஜித் ’ஆர்வம் இல்லாதவர், ’சூர்யா ’அதிர்ஷ்டத்தால் வந்தவர் - பிரபல நடிகர் விமர்சனம்

தமிழ்சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித்குமார், சூர்யா. இவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு மாநிலம் தாண்டி தெலுங்கு, கேரளா போன்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் மர்மதேசம்,வாணி, அரசு உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் மற்றும் சினிமாவில்  நடித்து பிரபலமான நடிகர் பப்லு ப்ரிதிவிராஜ் ,சூர்யா - அஜித் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது இருவரின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஒரு ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :
 
நடிகர் அஜித்துக்கு நடிப்பதில் ஆர்வமே இல்லை. அவருக்கு தொழில்பக்தி இருப்பதுபோலத் தெரியவில்லை. சினிமாவில் பெரிதாக ஈடுபாடும் இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் அவரது வீடு தேடிச் செல்கிறது. அதனால் சாதனையாளராக வலம்வருகிறரர். சினிமாவில் அவர் நடிப்பதைக் காட்டிலும் பிரியாணி சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் ஆர்வம் அதிமாக  உள்ளவர்.
 
நடிகர் சூர்யா பற்றி கூறுகையில் , சினிமாவில் நடிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபாட்டுடன் அனைத்தையும் செய்ய நினைக்கிறார். ஆனால் தன்னைச் சுற்றித்தான் உலகம் இயங்குகிறது என்ற மனநிலையில் இருப்பவர். ஓரளவு அதிர்ஷ்டம் கைகொடுத்தால் முன்னேறிவிட்ட அவருக்கு, இனிமேல் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வாய்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது நடிப்புக் காலம் முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் , நடிகை ராதிகா பற்றி குறிப்பிடுகையில் , அவரது நடிப்பு கொடூரமானது என்று தெரிவித்துள்ளார். 
 
பப்லுவின் இந்த  விமர்சனம் சினிமா வட்டாரத்திலும், சூர்யா ,அஜித் ரசிர்கர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.