’தலஅஜித் ’ படம் நள்ளிரவில் ரிலீஸ் ஆகிறதா ? ரசிகர்கள் ஆர்வம்

nerkonda parvai
Last Updated: சனி, 8 ஜூன் 2019 (21:08 IST)
தமிழக அரசு சமீபத்தில் 24 மணிநேரமும் திரையரங்குகள், கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பலத்த வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அஜித் தற்போது நடிப்பில் தயாராகிவரும் ’நேர்கொண்ட பார்வை’ என்ற படம் நள்ளிரவு வெளியாகுமா ? என்று ரசிர்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
மேலும் தமிழக அரசின் 24*7 சினிமாவுக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, தமிழ் சினிமாவில் நள்ளிரவில் வெளியாகும் முதல் சினிமாக நேர்கொண்ட பார்வை படமாகத்தான் இருக்கும்  என்று தல ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
நமது தமிழ்நாட்டில் புதுப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் நாளில்  அதிகாலை 5 மணிக்கு சிறப்புக் காட்சிகள் ரிலீசாவது வாடிக்கை. அதன் பிறகு வழக்கமானம் காட்சிகள் காலை 10 அல்லது 11 மணிக்கு வெளியாகும். 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு இனிமேல்  24 மணி சினிமா திரையரங்குகள் இயங்கும் 
என்று அறிவித்துள்ளதை அடுத்து பகலில் வேலைக்குச் செல்பவர்கள், இரவு வேளையில் சினிமா பார்க்க கிடைத்த வாய்ப்பாக இது அமையும் என்று கருத்து கூறிவருகின்றனர்.
 
இந்நிலையில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ஆகஸ்ட் மாதம்வெளியாகவுள்ள நிலையில், இப்படம் நள்ளிரவில் வெளியாகலாம் என்று தகவல் பரவிவருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :