செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (21:36 IST)

மாயாஜாலில் 84 காட்சிகள்: 'நேர் கொண்ட பார்வைக்கு குவியும் முன்பதிவு

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் வியாழன் அன்று அதாவது ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சென்னையில் பத்திரிக்கையாளர் காட்சியும் சிங்கப்பூரில் சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது. இந்த இரண்டு காட்சிகளிலும் இந்த படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த படத்தை வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர் இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வெளிவரவில்லை என்பதால் இந்த படத்திற்கு மற்ற அஜித் படங்களை விட மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்திற்கான முன்பதிவு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையின் முக்கிய திரையரங்குக வளாகங்களில் ஒன்றான மாயாஜால் திரை அரங்கில் உள்ள 16 ஸ்கிரீன்களிலும் இந்த படம் திரையிடப்பட உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீனிலும் 6 காட்சிகள் என மொத்தம் 184 காட்சிகள் முழுவதும் நேர்கொண்ட பார்வை திரைப்படம்தான் திரையிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 
இந்த 84 காட்சிகளுக்கும் மின்னல் வேகத்தில் முன்பதிவு நடைபெற்று வருவதால் முதல் நாளில் டிக்கெட் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அஜித் ரசிகர்கள் இந்த படத்தை 'விஸ்வாசம்' படத்தை விட இரு மடங்கு வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இந்த முன்பதிவில் இருந்து தெரியவந்துள்ளது