புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (17:22 IST)

அஜித் படத்தை நிராகரித்த ஏ.ஆர்.ரகுமான்? அவரே சொன்ன உண்மை தகவல் இதோ!

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தனது 60 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். 


 
அஜித் பைக் ரேஸராக அஜித் நடிக்கவுள்ள அப்படம் அஜித்தின் கடந்த கால வாழக்கையை சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் உருவாக உள்ளது. AK 60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைக்க  இசைப்புயல்  ஏ.ஆர்.ரகுமானிடம் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்து பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் முகுந்த உற்சாகத்தில் இருந்து வந்தனர். 
 
ஆனால், தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு கசப்பான தகவல் கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,  தற்போது தான் எந்த ஒரு புது படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் அதிகம் இருப்பதால் இந்த முடிவு எடுத்ததாகவும் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அஜித்தின் 60 வது படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. 
 
தற்போது ஏ.ஆர்.ரகுமான் விஜய்யின் பிகில் படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.