வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2019 (13:37 IST)

ஒரே டேக்: கிளைமேக்ஸ் காட்சியில் பிண்ணி எடுத்த அஜித்!

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது ரிலிஸுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 
 
இந்த படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
நேர்கொண்ட பார்வை படம் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். நேர்கொண்ட பார்வை படத்தின் ஷூட்டிங்கை வினோத் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடித்து கொடுத்துள்ளார். 
சமீப காலங்களில் அஜித் நடித்த படங்களிலேயே மிகக்குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட படம் இதுதான் என தெரிகிறது. இதில் அஜித்துக்கும் நிறைய பங்கு உள்ளது. குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்தாராம். 
 
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக நிதிமன்றம் போன்ற பிரம்மாண்ட செட் போட்டு படபிடிப்பை நடத்தியுள்ளனர். அஜித்துக்கு இந்த காட்சியில் நீண்ட வசனங்கள், நீதிமன்ரத்தில் அவர் வாதாடி ஜெயிக்க வேண்டும். 
 
இப்படிப்பட்ட கிளைமேக்ஸ் காட்சியை அஜித் பக்காவாக ஒரே டேக்கில் முடித்துவிட்டாராம். இது படக்குழுவினருக்கு சூப்பர் சர்ப்ரைஸாக இருந்ததாம். அந்த சர்ப்ரைஸை விரைவில் திரையில் காண தல ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்....