திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:02 IST)

விரைவில் அஜித்துடன் படம் – வெங்கட் பிரபு தகவல் !

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்து பதில் அளித்துள்ளார்.

வெங்கட்பிரபு சென்னை 28 ,சரோஜா, கோவா எனத் தனது நண்பர்களை வைத்து மல்டிஸ்டார் படங்களை இயக்கி தனக்கென ஒரு ரூட்டைப் பிடித்து அதில் ஜாலியாகப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்தின் 50 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தப் படம்தான் மங்காத்தா. ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் ஜானர்களில் ஒன்றான  பாய்ஸ்  ஒன்லி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் வில்லத்தனமான நடிப்பைக் கண்டு ரசிகள்கள் குறிப்பாக இளைஞர்கள் புல்லரித்து சில்லறையை சிதற விட்டனர்.

அதன் பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்துப் படம் இயக்க ஆரம்பித்தார். ஆனாலும் மங்காத்தா போல பேர் சொல்லும் படங்கள் எதுவும் அவரிடம் இருந்து அதன் பின்னர் வரவில்லை. இதையடுத்து அஜித் ரசிகர்கள் அவரிடம் அவ்வப்போது மங்காத்தா 2 பற்றியக் கேள்விகளை டிவிட்டரில் கேட்டு வந்தனர்.

வெங்கட் பிரபுவும் விரைவில் விரைவில் என சொல்லி சமாளித்து வந்தார். இப்போது வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர் கே நகர் படத்தின் ரிலிஸூக்கான புரோமோஷன்களில் ஈடுபட்டு வரும் அவரிடம் மீண்டும் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் ’அதற்கான பேச்சுவார்த்தைகள் ’ நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விரைவில் அறிவிப்பு வரும்  ’ எனக் கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வெங்கட் பிரபு தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முன் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மாநாடு படத்திற்கு பின் அஜித்- வெங்கட்பிரபு இணையும் அடுத்தப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.