வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (11:16 IST)

மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கு; விரைவில் அஜித்தின் பாலிவுட் அறிமுகம் – போனி கபூர் திட்டம் !

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் அஜித் விரைவில் பாலிவுட் படங்களில் நடிக்க சம்மதிப்பார் என தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது ரிலிஸுக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். இது இந்தியில் கடந்த ஆண்டு வெளியானப் பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தப்படத்தினை இயக்குனர் ஹெச் வினோத் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக முடித்துள்ளார். சமீபகாலங்களில் அஜித் நடித்தபடங்களிலேயே மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட படம் நேர்கொண்ட பார்வைதான். இந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. எடிட் செய்யப்பட்ட சில காட்சிகளைப் பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர் ‘சில காட்சிகளைப் பார்த்தேன். அஜித்தின் நடிப்பு அற்புதம். அவருக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை வைத்துள்ளேன். அவர் விரைவில் பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

போனிக்கபூரின் இந்த டிவிட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நேர்கொண்ட பார்வை படம் சுதந்தர தின வெளியீடாக ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது.