வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 6 ஏப்ரல் 2019 (13:47 IST)

என்னது ரஜினி, அஜித்துக்கு அடுத்து ஹிப் ஹாப் ஆதியா? நட்பே துணை கலெக்‌ஷன்

ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான படம் நட்பே துணை. இந்த படம் ரசிகர்கள் மத்தில் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
ஹிப் ஹாப் ஆதி, அனாகா, கரு.பழனியப்பன், ஹரீஸ் உத்தமன், ஆர்ஜே விக்னேஷ், ஷாரா, எரும சாணி, விஜய், பிஜிலி ரமேஷ் ஆகிய யூடியூப் சேனல் பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். 
 
நட்பே துணை படம் 2 நாட்கள் முடிவில் ரூ.6 கோடி வரை வசூலித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாள் முடிவில் இந்த படம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. 
 
அதாவது, கார்த்திடின் தேவ், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகமாம். அதே போல், முதல் நாள் ஒப்பனிங் கணக்கில் பேட்ட, விஸ்வாசம் படத்தை அடுத்த அதிக கலெக்‌ஷன் இந்த படத்திற்குதான் கிடைத்துள்ளதாம்.